📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 06, 2026 11:03 PM

போர் நிறுத்தம் தொடர்பாக புடின், ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க குழு சந்திப்பு

போர் நிறுத்தம் தொடர்பாக புடின், ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க குழு சந்திப்பு

கீவ்: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை அமெரிக்க குழுவினர் சந்தித்து பேசினர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது-. தற்போது இருதரப்பிடையே வான்வழி தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் தற்போது ரஷ்யாவின் எரிசக்தி மையங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைனின் இத்தாக்குதல்களால், ரஷ்யாவில் தற்போது கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரஷ்யா, தற்போது தங்கள் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த நாடுகளை எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தற்போது அமைதி குழு ஒன்றை பேச்சு நடத்த ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அனுப்பியது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர், நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் இன்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சந்தித்து பேசினர். இதனால் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது.