பாஜ கூட்டணியில் திமுக
மதுரை: ''தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடக் கூடும்,'' என, அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: த.வெ.க., ஆட்சி நீடிக்காது என தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சொல்லி வருகின்றன. இதில் இருந்தே அந்த இரு கட்சிகளும் சேர்ந்திருப்பது தெரிகிறது. தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் சட்டசபையில் முதல்வர் பதிலுரை முடிந்த பின், அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். அதற்கு பின் மானிய கோரிக்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் வைத்தால், இரவு 9:00 மணி ஆகிவிடும். எனவே தான், அன்றைய தினம் கேள்வி நேரம் இல்லை.
கோவில் விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். முந்தைய அரசுகள் செய்த தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் பெயரை போட கோரி, யாராவது நீதிமன்றத்திற்கு செல்வார்களா. இது சாதாரண விஷயம். ஒன்றும் இல்லாத விஷயத்தை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜன் பேசுகிறார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.