📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 02:32 AM

Nooru Sami Blue Sattai Maran Review

Nooru Sami Blue Sattai Maran Review

சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் நூறு சாமி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களுக்கு படம் பிடிக்கவே செய்திருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸிலும் டீசன்ட்டான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நூறு சாமி திரைப்படத்தின் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவரான சசி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ரிலீஸுக்கு முன்னதாகவே பிரபலங்களிடம் அப்ளாஸை அள்ளிவிட்டு நேற்று ரிலீஸானது. அவர்கள் போன்றே மக்களும் படத்தை கொண்டாடுகிறார்கள்.குடும்ப ரசிகர்கள் மத்தியில் படம் சேர்ந்துவிட்டதால் இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கருதப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் தன் யூடியூப் சேனலில் நூறு சாமி விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "இந்தப் படத்தின் கதை ஒரு உண்மை கதை என்று சொல்கிறார்கள். சொல்லப்பட வேண்டிய கதையும்கூட. ஆனால் சொல்லிய விதத்தில் சொதப்பி வைத்துவிட்டார்கள். விதவை மறுமணம் என்பது தேவையான விஷயம்தான். இந்த தேவையான விஷயம் எப்படி கட்டாய விஷயம் என்பதற்கு சினிமாவில் கதை சொல்ல வேண்டியிருக்கிறது.

மேம்போக்காக போய்விட்டது: கதையில் டீட்டெயில் எதுவும் இல்லாததால் படத்தோடு ஒன்றி பார்க்க முடிவதில்லை. சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன் படத்தில் தங்கைக்கு ஒரு ஷூ வேண்டும். அந்த ஷூ ஏன் முக்கியமானது என்பதை விளக்கிவிட்டு கதையை சொல்லியிருப்பார்கள்.அதற்கு பிறகு அந்தப் படம் அவ்வளவு பரபரப்பாக போகும். அந்த ஷூ ஏன் தேவை என்பதை அவர்கள் அழுத்தமாக சொன்னதால்தான் அந்தப் படத்தை இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்தப் படத்தில் அழுத்தி சொல்லவில்லை. அதனால் படம் மேம்போக்காக போய்விட்டது.

இசை படுத்துது: வில்லனை காண்பிக்கிறார்கள். அந்த கேரக்டருக்குள் எந்த ஒரு மோட்டிவ்வும் இல்லை. ஊரார்கள் எல்லாம் அவரை ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எதற்கும் சரியான காரணம் இல்லை. இசை இதில் நம்மை தவறாக வழிநடத்தியது. இந்த இடத்தில் அழுக வேண்டும் என்பதை இளையராஜா இசை சொல்லும். அது நம்மை வழிநடத்தும். ஆனால் இந்தப் படத்தில் சீரியஸான இடத்தில் காமெடி மியூசிக் இருக்கிறது. காமெடியான இடத்தில் சீரியஸ் மியூசிக் இருக்கிறது. படம் என்ன மூடில் இருக்கிற்து என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை.

மிஸ் செய்துவிட்டார்கள்: இது ஒரு ஃபீல் குட் படமாக போயிருக்க வேண்டியது. இடையிடையே க்ரைம் த்ரில்லர் படத்துக்கு போல் இசையமைத்திருக்கிறார்கள். இதில் ஒரு யூடியூப் ஃபேமிலி எல்லாம் வரும். அதெல்லாம் கதையையே வெளியே கொண்டு சென்றுவிட்டது. சசியின் படம் என்றாலே அது ஃபீல் குட்டாகவும், எமோஷனலாகவும் இருக்கும். இதுவும் அப்படி போயிருக்க வேண்டியதுதான். ஆனால் எங்கேயோ மிஸ் செய்துவிட்டார்கள்" என்றிருக்கிறார்.