மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை: மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா? என்று முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும் போதைப்பொருட்களும் வேர்விட்டுப் பரவிய நிலையில், தற்போதைய ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது.
பிரசாரத்தின் போது ‘தூய சக்தி’ என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மௌன விரதமிருந்து மகளிர் பாதுகாப்பைப் பறிப்பது தான் ‘‘மாற்றமா” முதல்வர் விஜய்? ‘‘மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது” என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாகச் செயல்படுங்கள்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n