நேபாள பேரழிவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்துகள்: சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கண்டனம்
சிங்கப்பூர்: நேபாள பேரழிவின் போது, இந்தியர்களுக்கு எதிராக இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள் வெட்கக்கேடான, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேபாளம் பெருவெள்ளம் இந்தியாவை மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளையே உலுக்கியது. இந்த பேரழிவில் சிக்கி பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இணையதளங்களில் சர்ச்சையான கருத்துகள் பதிவாகின. இது போன்ற விமர்சனங்கள், இந்தியாவை இலக்காக கொண்ட இனவெறி தாக்குதல்கள் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அவல் மேலும் கூறியதாவது;
நேபாள பேரழிவு குறித்து, இணையத்தில் பதிவிடப்பட்ட கருத்துகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிக மோசமாக பல கருத்துகள் இருந்தன, எனவே அவற்றை நீக்க வேண்டியதாக இருந்தது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இப்படியான மோசமான கருத்துகளை சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டார்களா என்பது எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும் அந்த கருத்துகள் வெட்கக்கேடானது, முற்றிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இணையத்தில் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் இந்தியர்களை இழிவுபடுத்துவதாக இருந்தது.
இவ்வாறு உள்துறை அமைச்சர் கே. சண்முகம் கூறினார்.
முன்னதாக, நேபாளம் பேரழிவில் காணாமல் போனவர்களில் 9 பேர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தோற்றத்தை வைத்து, உண்மையில் இவர்கள் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானா என்று இணையத்தில் திரிபுவாத கருத்துகள் இடம்பெற்று இருந்தன.