📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 10, 2026 01:04 AM

நானா படேகர் குறித்த தனுஸ்ரீ தத்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

நானா படேகர் குறித்த தனுஸ்ரீ தத்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

புகழ் பெற்ற நடிகர் நானா படேகர் மறைவு குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்த ‘ஈவில் டெட்’ என்ற கருத்துக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (AICWA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மூத்த நடிகர் நானா படேகர் வியாழக்கிழமை (அக்டோபர் 8) அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்டிருந்த வீடியோவில் நடிகை தனுஸ்ரீ தத்தா, ‘ஈவில் டெட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்து மலினமான விளம்பரம் தேடும் முயற்சி என்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புகழ் மிக்க கலைஞர் நானா படேகர் மறைவு குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்த ‘ஈவில் டெட்’ என்ற கருத்துக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், கார்கில் போரின்போது தேசத்துக்காக சேவை செய்தவரும், நாம் ஃபவுன்டேஷன் மூலம் விவசாயிகளின் துயரத்தின்போது துணை நின்ற கலைஞர் நானா படேகர் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும், தேசமும் துயரத்தில் இருக்கிறது. அவருக்கு எங்களின் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுக்கிறோம்.

இத்துயர் மிகுந்த நேரத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கும் கருத்தில், ‘ஈவில் டெட்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது; அவமானகரமானது.

ஒருவர் இறந்த பின்பு அவர் குறித்து இதுபோல வார்த்தையைப் பயன்படுத்துவது அடிப்படை மனிததன்மைக்கு எதிரானது. இதுவரையில் நமது சினிமா துறையில் யாருடைய மறைவுக்கும் யாரும் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியது இல்லை. நீங்கள் தான் முதல் நபர், நீங்களே கடைசி நபராகவும் இருக்க வேண்டும்.

இதுபோன்ற சமயங்களில் என்ன பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என நமது துறையில் இருப்பவர்களுக்கு தெரியும். நீங்கள் நாவடக்கத்துடன் இருந்திருக்க வேண்டும்.

இன்று (அக்.8) உங்களுக்கு ஒரு வேலை இருப்பதாகவும், ஒரு பெரிய நிகழ்ச்சிக்காக லக்னோ செல்வதாகவும், இந்த நாளை அதற்காகவே திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறீர்கள். உங்கள் வேலையை கவனியுங்கள். யாரும் உங்களை கேட்கவில்லை. உங்கள் நிகழ்ச்சி லக்னோ அல்லது லண்டனில் நடந்தாலும் அதில் நீங்கள் கவனம் செலுத்தினாலும், இல்லை என்றாலும் யாருக்கும் அதில் ஆர்வம் இல்லை.

மகத்தான ஒரு கலைஞரின் மறைவு குறித்து நாடு துயரத்தில் இருக்கும்போது நீங்கள் உங்கள் சொந்த நிகழ்ச்சி மற்றும் திட்டங்கள் பற்றி பேசுவது உங்களுடைய குறுகிய மனநிலையையே காட்டுகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நானா படேகர் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை தனுஸ்ரீ பகிர்ந்திருந்த வீடியோவில், ‘நானும் அந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். இன்று எனக்கு வேலை இருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்காக நான் லக்னோ செல்கிறேன். அதில் நான் கவனம் செலுத்த வேண்டும்.

லக்னோவில் நான் பெரிய நிகழ்ச்சியை நடத்துகிறேன். அது எனக்கு மிகவும் முக்கியமானது. இன்று அதற்காகவே திட்டமிட்டு வைத்திருந்தேன். நிறைய லைவ் பதிவிட வேண்டும் எனவும் எண்ணி இருந்தேன். இன்று மாலை அனைத்து ஊடகங்களும் அந்த ‘ஈவில் டெட்’-ல் தான் ஆர்வம் காட்டும். கட்டாயம் அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்திருந்தார்.

Mumbai, 8 October 2026 AICWA strongly condemns Tanushree Dutta's "Evil Dead" remark on the passing of legend Nana Patekar The entire film industry and the whole country are in mourning at the passing of Nana Patekar, the Padma Shri awardee, the man who served the nation during the Kargil War, and the artist whose Naam Foundation stood by farmers' families in distress. We pay him our humble tributes and stand with his family in their hour of grief. At such a time, Tanushree Dutta's statement on social media, in which she used the words "Evil Dead," is deeply objectionable, insensitive and shameful. AICWA strongly condemns it. To use such words for a person after his death goes against basic humanity. Until today, no one in our film industry has made such a statement after someone's passing. You are the first, and we pray you will be the last. People in this industry know what to say on such an occasion and when to stay silent. You should have kept a check on your tongue. You said that today is your work day, that you are going to Lucknow for a big event, and that your whole day is planned. Do your work; nobody asked you. Whether your event is in Lucknow or London, whether you focus or not, nobody is interested. On a day when the country is mourning the loss of a stalwart, speaking about your own event and your own plans reflects a very small mindset. We pray for the peace of Nana Patekar's soul. Er. Suresh Shyamlal Gupta President AICWA | #NanaPatekar | #AICWA | #AllIndianCineWorkersAssociation | | @nanagpatekar | @ANI | @PTI_News | @ians_india |