📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 09, 2026 08:01 PM

முதல்

முதல்

தமிழக முதல்-அமைச்சர் விஜய்-ஐ காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்கிறார்.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி நாளை மதியம் 12.30 மணியளவில் சென்னை வருகிறார்.

முதல்-அமைச்சர் விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு

விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு ராகுல் காந்தி செல்கிறார். அங்கு முதல்-அமைச்சர் விஜய்-ஐ ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அங்கு ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் விஜய் மதிய விருந்து அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சென்னை தீவுத்திடலில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ’மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதனை தொடர்ந்து நாளை மாலையே ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.