📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 08, 2026 04:04 PM

முதியவரை தாக்கி, மரணம் ஏற்படுத்தியவருக்கு 15 ஆண்டு சிறை, 10 பிரம்படிகள்

முதியவரை தாக்கி, மரணம் ஏற்படுத்தியவருக்கு 15 ஆண்டு சிறை, 10 பிரம்படிகள்

முதியவர் ஒருவரைத் தாக்கி மரணம் ஏற்படுத்திய குற்றத்திற்கு 33 வயது முகமது சிராஜுதீன் முகமது யூசுப்புக்கு 15 ஆண்டுகள் சிறையும் 10 பிரம்படிகளும் வியாழக்கிழமை (அக்டோபர் 8) விதிக்கப்பட்டன.

நோக்கமற்ற கொலைக் குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2024 நவம்பர் 19ஆம் தேதி, மது போதையிலிருந்த சிராஜுதீன், சிராங்கூன் நார்த் அவென்யூ 2ல் உள்ள கடைத்தொகுதிக்கு வெளியே 71 வயதான ஜான் ஆண்ட்ரூஸ் என்ற முதியவரை எதிர்பாராதவிதமாக உரசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரும் அருகில் இருந்த சந்துக்குச் சென்று வாதத்தை தொடர்ந்துள்ளனர். சிராஜுதீன், முதியவரைத் தாக்கி கீழே தள்ளியதுடன், தரையில் விழுந்த அவரது உடல் பகுதியில் எட்டு முறை மிதித்துள்ளார். படுகாயமடைந்த முதியவர் 10 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

“இது தேவையற்ற, கொடூரமான வன்முறையின் உச்சநிலை” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். முதியவரின் வயது,சிராஜுதீன் அதிகளவில் மது அருந்தியிருந்ததைக் கருத்தில் கொண்டு நீதிபதி ஆண்ட்ரே மணியம் இத்தண்டனையை வழங்கினார்.

சிராஜுதீனுக்கு ஏற்கெனவே மதுபோதையில் வன்முறையில் ஈடுபட்ட குற்றப் பின்னணி உண்டு. 2023ல் 54 வயது நபரைத் தாக்கிய குற்றத்திற்காகவும், 2022ல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகவும் அவர் தண்டனை பெற்றிருந்தார்.