📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 08, 2026 08:04 PM

அமெரிக்க வேலை அனுமதி: வெளிநாட்டு மாணவர்களிடம் $90,000 கட்டணம்

அமெரிக்க வேலை அனுமதி: வெளிநாட்டு மாணவர்களிடம் $90,000 கட்டணம்

வாஷிங்டன்: அனைத்துலக மாணவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் குறைந்தபட்சம் US$70,000 (S$90,000) பயிற்சிப் பணிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தனது இணையத்தளத்தில் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு விசா வைத்திருப்பவர்கள் மீதான டிரம்ப் நிர்வாகத்தின் தீவிரக் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த அளவுக்கு அதிகக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரையின்படி, எஃப்-1 விசா வைத்துள்ள புலம்பெயராத மாணவர்கள், விருப்ப நடைமுறைப் பயிற்சி எனப்படும் வேலைத்தளப் பயிற்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு US$70,000 தொகையுடன் கூடுதல் வேலைப் பயிற்சிகளுக்கு US$30,000 செலுத்த வேண்டி இருக்கும்.

மோசடிகளைத் தடுத்து, குடிநுழைவு முறையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்கவும் இந்தப் புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் பள்ளிப் பருவத்தின்போது வாரத்திற்கு 20 மணிநேரம் வரையிலும் பட்டம் பெற்ற பிறகு குறிப்பிட்ட காலத்திற்கும் வேலைப் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.

பயிற்சிகளில் சேர்பவர்கள் தற்போது கிட்டத்தட்ட US$500 மட்டுமே செலுத்தி வருகின்றனர்.

“முதலாளிகள், மாணவர்கள், நிறுவனங்கள் எஃப்-1 புலம்பெயராப் பிரிவின் அனுமதிக்கு ஏற்ப சரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதிசெய்வதற்காகவே தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது,” என்று அத்துறை கூறியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இத்தகைய பயிற்சித் திட்டங்கள், எச்-1பி விசாவின் கீழ் வேலை தேடும் மாணவர்களுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றன. எச்-1பி விசாவிற்கும் டிரம்ப் நிர்வாகம் கட்டணங்களை உயர்த்த இலக்கு வைத்துள்ளது.

எச்-1பி விசா திட்டம் பன்னெடுங்காலமாக உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவிliருந்து வரும் இளம்பொறியாளர்களும் அறிவியலாளர்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயின்ற கல்வியைச் சிறந்த ஊதியத்துடன் கூடிய வேலைகளாகவும் அமெரிக்க நிரந்தரக் குடியுரிமைக்கான பாதையாகவும் மாற்ற உதவியுள்ளது.

முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான பணியிடங்களை நிரப்ப இதுபோன்ற ஊழியர்களையே பெரிதும் சார்ந்துள்ளன.