📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 10:02 AM

 'மக்களுக்கு துாரமான சக்தி' : த.வெ.க., மீது கனிமொழி தாக்கு

 'மக்களுக்கு துாரமான சக்தி' : த.வெ.க., மீது கனிமொழி தாக்கு

தாராபுரம்: ''இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் தவிர, தமிழகம் முழுதும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது,'' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி கூறினார்.

தாராபுரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, நேற்று பிரசாரம் செய்த கனிமொழி பேசியதாவது:

ஓட்டு போட்ட மக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக தான், இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. சினிமா போல ஒரே நாளில் மாற்றி விடுகிறேன் என, சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், எதை மாற்றினார்?

தி.மு.க., ஆட்சியின் போது தமிழகம் தான் முதலிடம். த.வெ.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, அரிவாள் வெட்டு போன்றவை தான் சாதனை. முதல்வர் விஜய் ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில், 200க்கும் மேல் கொலைகள், 300க்கும் மேல் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள், எட்டு சிறை மரணங்கள், 10 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.

சென்னை - வண்டலுாரில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தை, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த குழந்தை தேர்வு எழுத பயந்து நாடகமாடுவதாக இந்த கொடூரமான ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இதுதான் துாய சக்தி ஆட்சியா?

த.வெ.க., ஆட்சியில் தமிழகம் முழுதும் மின்வெட்டு பிரச்னை உள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மட்டும் தான், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும், ஆறு முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது.

இந்த நாடகம், இந்த 'ரீல்ஸ்' இந்த சினிமா படம் எல்லாம், தமிழகத்தில் ரொம்ப நாட்கள் ஓடாது. உண்மையான தீய சக்தி, மக்களுக்கு துாரமான சக்தி, தீர்ந்து போன சக்தி யார் என்று, மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். சினிமாவை பார்த்து ஏமாந்த காலம் முடிந்து விட்டது. இவ்வாறு பேசினார்.