📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 08, 2026 09:04 AM

மேட்டுப்பாளையத்தில் 45 மி மீ., மழை: நான்கு வீடுகள் சேதம்

மேட்டுப்பாளையத்தில் 45 மி மீ., மழை: நான்கு வீடுகள் சேதம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், 45 மி.மீ., மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நான்கு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மேட்டுப்பாளையத்தில், ஆறு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையத்தில், 45 மி.மீ., மழை பெய்துள்ளது. வெள்ளப்பெருக்கால், நகரை ஒட்டியுள்ள ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில், நான்கு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சேரன் நகர் 1ல், ரயில்வே லைன் ஓரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. வீடுகள் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி காம்பவுண்ட் சுவர் முடியும் இடங்களில், பத்மா, சந்திரா ஆகியோரின் வீடுகள் சேமதடைந்தன.

இவர்கள் கூறியதாவது:

எங்கள் வீடுகளின் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானமும், காம்பவுண்ட் சுவரும் உள்ளது. மைதானத்தில் தேங்கும் நீர் வெளியே செல்வதற்கு, காம்பவுண்ட் சுவரில், நான்கு இடைவெளிகள் விட்டிருந்தனர். மைதானத்தை சீரமைத்த போது இருந்த மண்ணை, நீர் வெளியே செல்லும் இரண்டு இடைவெளியில் கொட்டி ஒரு பகுதியை மூடிவிட்டனர். மற்றொரு பகுதியில் இரண்டு இடைவெளிகள் இருந்தன.

கனமழை பெய்ததால், மைதானத்தில் நீர் வெளியே செல்லும், இரண்டு வழியில் குப்பை அடைத்ததால், நீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்டட்டது. இதனால், எங்கள் வீட்டருகே இருந்த பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து, வீட்டுக்குள் நீர் புகுந்து பாதிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம், நீர் வெளியேறும் இடத்தில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.