📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 07, 2026 08:03 PM

ஜாம்பவான் சாதனையை உடைத்து இந்திய வீரர் தன்மய் உலக சாதனை.. அறிமுக டெஸ்டில் 14 விக்கெட்டுகள்

ஜாம்பவான் சாதனையை உடைத்து இந்திய வீரர் தன்மய் உலக சாதனை.. அறிமுக டெஸ்டில் 14 விக்கெட்டுகள்

ஜாம்பவான் சாதனையை உடைத்து இந்திய வீரர் தன்மய் உலக சாதனை.. அறிமுக டெஸ்டில் 14 விக்கெட்டுகள்

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக ஆட்டத்திலேயே 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, 19 ஆண்டுகால உலக சாதனையைத் உடைத்து எறிந்தார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தன்மய் பலோடா.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணிக்காக முதல்முறையாகக் களமிறங்கிய ஹரியானாவைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தன்மய் பலோடா, முதல் இன்னிங்ஸில் 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

ஒட்டுமொத்தமாக 73 ரன்களை மட்டுமே கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை சுருட்டினார். இதன் மூலம் சர்வதேச அண்டர் 19 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2007-ல் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி இந்தியாவுக்கு எதிராக 92 ரன்களுக்கு 12 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக வர ஆசைப்பட்ட தன்மய், 16 வயதுக்குட்பட்டோர் போட்டியின் போது சுழற்பந்து வீசி ஒரே ஆட்டத்தில் 7 விக்கெட் எடுத்தார். அதன் பின்னரே முழு நேர சுழற்பந்து வீச்சாளராக மாறினார். கூச் பெஹார் கோப்பையில் 12 ரன்களுக்கு 9 விக்கெட் வீழ்த்திய இவர், ரஞ்சி கோப்பையிலும் அபாரமாகப் பந்துவீசியுள்ளார்.

உண்மையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தன்மய் பலோடாவின் பெயர் முதலில் இடம்பெறவில்லை. மற்றொரு வீரர் விலகியதால் மாற்று வீரராகவே இவருக்கு அழைப்பு வந்தது. தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ள தன்மய் பலோடாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் வீழ்த்தும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கான தேவை இருக்கும் நிலையில் இவர் மீது தேர்வுக் குழுவின் கவனம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.