Mandaadi Day 4 Box Office
சென்னை: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் மண்டாடி. இதில் அவருடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிக்க; எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் சூப்பர் வரவேற்பை பெற்ற சூழலில் அதன் வசூல் குறித்த விவரங்களும் வெளியாகியிருக்கின்றன.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மதிமாறன் புகழேந்தி. உதவி இயக்குநர் மட்டுமில்லை வெற்றிக்கு இவர் உறவினரும்கூட. ஏற்கனவே செல்ஃபி என்ற படத்தை இயக்கியிருந்தார். அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனைத் தொடர்ந்து இப்போது சூரி, சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்டோரை வைத்து மண்டாடி படத்தை இயக்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு படமானது தியேட்டர்களில் ரிலீஸானது.
செம கூட்டம்: சூரி இப்போது முழுக்க முழுக்க ஹீரோவாகவே மாறிவிட்டார். படம் ரிலீஸான முதல் நாளில் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. ஆச்சரியம் தரும் விதமாக இளம் பெண்கள் நிறைய பேர் படம் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் தங்களை சூரியின் ரசிகைகளாகவும் காண்பித்துக்கொண்டார்கள். முக்கியமாக சூரி ஸ்க்ரீனில் வரும்போதெல்லாம் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் சத்தம் விண்ணை பிளந்தது என்றே சொல்லலாம்.
எப்படி இருக்கு படம்?: இதுவரை தமிழ் சினிமாவில் வராத கதை களமான பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது படம். மதிமாறன் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக எல்லோருக்கும் புரியும் விதமாக அந்தப் போட்டியை பற்றி பதிவு செய்திருக்கிறார். அவருக்கு சூரி உள்ளிட்டோரும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆக்ஷன், சென்ட்டிமென்ட், நட்பு என அத்தனையும் படத்தில் இருந்ததால் ரசிகர்களிடம் நன்றாகவே கனெக்ட் ஆகிவிட்டது.
அந்தக் காட்சி எல்லாம் மெர்சல்: படத்தில் சூரிக்கு ஏகப்பட்ட மாஸ் காட்சிகள் இருக்கின்றன. அதை அவரும் அருமையாகவே செய்திருந்தார். குறிப்பாக இறுதியில் வரும் போட்டியில் அவருக்கும் சுஹாஸுக்கும் வரும் சண்டை காட்சி உண்மையில் அற்புதம். எக்கச்சக்க கஷ்டங்களை இந்தப் படத்துக்காக சூரி அனுபவித்திருக்கிறார் என்பது படத்தில் வந்திருக்கும் அவுட் புட்டை பார்க்கையில் தெரிகிறது. இனிமேல் கண்டிப்பாக அவர் பெரிய மாஸ் ஹீரோவுக்கான லிஃப்ட்டில் ஏறி உயரம் செல்வார் என்றும் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
பாக்ஸ் ஆஃபிஸ் என்ன?: படத்துக்கு விமர்சன ரீதியாக ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அதேபோல் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இதனுடன் போட்டிக்கு வந்த சர்தார் 2 சொதப்பிவிட்டதால்; மேலும் கூட்டம் இதற்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நான்காவது நாளான நேற்று 13 கோடியே 5 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம்.மொத்தம் நான்கு நாட்களில் அப்படம் 34 கோடியே 60 லட்சம் ரூபாயை பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்திருப்பதாக அந்த இணையதளம் கூறியிருக்கிறது.
இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் 75 கோடி ரூபாயாம். இப்போது படத்துக்கு வரும் வசூலை பார்க்கையில் இன்னும் சில நாட்களில் போட்ட பட்ஜெட்டை படம் எடுத்துவிடும். மேலும் 100 கோடி ரூபாய் வசூலும் சாத்தியமாகும் சூழலே நிலவுகிறது. இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.