Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது?
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Tamil Today (14-09-2026): விநாயகர் சதுர்த்தி தினமான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கு காணலாம்.
செப்டம்பர் 14ம் தேதியான வளர்பிறை சதுர்த்தி திருநாளாகும். ஆவணி மாதம் 28ம் தேதியான இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.
இன்றைய ராசிபலன்கள் (செப்டம்பர் 14)
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
தொழில் சார்ந்த கருவிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வாகன தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். மனதில் இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். முதலீடு தொடர்பான விஷயங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மேல்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில அங்கீகாரங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையை கையாளவும். விவசாய பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வாகன விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம்.
புதுவிதமான காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுகமாக இருந்து வந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். பணி நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.
புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதளவில் ஒரு தடுமாற்றம் உண்டாகும்.
விருச்சிகம்
எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில் நல்ல பெயர்கள் கிடைக்கும். தன வரவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிக்கலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தைரியம் பிறக்கும்.
வியாபாரப் பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும்.
உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதக்கம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி