📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 02, 2026 11:03 AM

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.. மேரி கோம் சாதனை சமன்

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.. மேரி கோம் சாதனை சமன்

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.. மேரி கோம் சாதனை சமன்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் பலம் வாய்ந்த சீன வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

இதன் மூலம் 2014 ஆம் ஆண்டு மேரி கோம் தங்கம் வென்றதற்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை என்ற மாபெரும் வரலாற்று சாதனையை லவ்லினா படைத்துள்ளார்.

நகோயாவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், அமெச்சூர் குத்துச்சண்டையில் 14-0 என இதுவரை தோல்வியே சந்திக்காத ஆசிய சாம்பியனான சீனாவின் பாவோ ஜியியை எதிர்கொண்டார்.

தொடக்க சுற்றிலிருந்தே இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக குத்துகளை இறக்கினர். லவ்லினா தனது துல்லியமாக தாக்க, சீன வீராங்கனை நெருங்கி வந்து அப்பர்கட் குத்துகளை விட முயன்றார். முதல் சுற்றின் முடிவில் நடுவர்கள் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் லவ்லினாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.

2வது சுற்றில் சீன வீராங்கனை தீவிரமாகத் தாக்கினாலும், பதற்றமடையாத லவ்லினா தற்காப்புடன் செயல்பட்டு சரியான நேரத்தில் பலமான இடது கை ஹூக் குத்துகளை இறக்கினார். இந்த சுற்றில் 5 நடுவர்களில் 4 நடுவர்கள் லவ்லினாவுக்கு ஆதரவாக புள்ளிகளை வழங்கியதால், அவர் 4-1 என வலுவான முன்னிலை பெற்றார்.

கடைசி சுற்றில் சீன வீராங்கனை எவ்வளவு போராடியும் லவ்லினாவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. நேரத்தை சாதுரியமாக கையாண்ட லவ்லினா, ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இறுதியில் 5-0 என்ற ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சீன வீராங்கனையை வீழ்த்தி லவ்லினா போர்கோஹெய்ன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

கடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த லவ்லினா, இம்முறை தனது தங்கக் கனவை நனவாக்கி அரிய சாதனை படைத்துள்ளார். மேரி கோமின் 12 ஆண்டு கால சாதனையை சமன் செய்து இந்தியாவிற்கு தங்கப் பெருமை சேர்த்துள்ள லவ்லினா போர்கோஹெய்னுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.