“மது இல்லாத தமிழகம்” சவுமியா அன்புமணியின் புதிய இயக்கம் தொடக்கம்
இன்று “மது இல்லாத தமிழகம்” என்ற புதிய இயக்கத்தை சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.
சென்னை தியாகராய நகரில் இன்று பாமக கட்சியின் உறுப்பினர் சவுமியா அன்புமணி “மது இல்லாத தமிழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் சமூக,சுகாதார மற்றும் பொருளாதார முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காகவே மது விற்பனை செய்யப்பட்டால், அத்தகைய கல்வியே தேவையில்லை, நாடு மது இல்லாமல் இருந்தால் போதுமானது என்றும் காந்தியடிகளின் கருத்தை முன்வைத்து இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மது அருந்துவதால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பொதுமக்களும், அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.