📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 11, 2026 09:04 PM

கருகும் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

கருகும் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

கருகும் நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம் ரெங்கநாதபுரம் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1000-ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பா பயிர்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று வயலில் இறங்கி, கைகளில் கொடிகளை ஏந்தி, கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகள் போதுமான நீர் இருப்பு இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டிய தண்ணீர் 81 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டு டெல்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா சாகுபடி நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் பயிர்கள் முழுவதுமாக கருகி வருகிறது.

பம்ப் செட்டிலிருந்து வரக்கூடிய தண்ணீர் உப்பு நீராகவும் பயிர்கள் கருகி, டிராக்டரை வைத்து மீண்டும் உழுது வருவதால் பெரிய அளவில் மனக்கஷ்டத்தை அனுபவித்து வரும் சூழ்நிலையில், அருகில் இருக்கும் வேளாண் துறை அமைச்சரோ, அதிகாரிகளோ, வருவாய்த்துறையினரோ பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடாமல் இருப்பது விவசாயிகளுக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

மெலட்டூர், ரெங்கநாதபுரம், விழிதியூர், அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் கருகி முழுவதுமாக அழிந்து போய் விட்ட நிலையில் கை டிராக்டரை வைத்து உழக்கூடிய நிலைமை கவலை அளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முற்றுகையிடும் என்றும் தெரிவித்தனர்.