📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 11, 2026 10:03 PM

சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தீ; ஹைதராபாத்தில் அவசர தரையிறக்கம்

சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தீ; ஹைதராபாத்தில் அவசர தரையிறக்கம்

ஹைதராபாத்: டில்லியில் இருந்து சென்னையை நோக்கி இண்டிகோ விமானம் இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டது. மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைய இருந்தது. ஆனால், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனால், விமானம் அவசர அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகளின் உடமைகள் வைக்கும் பகுதியில் ஏற்பட்ட தீயை, விமான ஊழியர்கள் தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி உடனடியாக அணைத்தனர்.

இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்தோ, யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் தற்போது வெளியாகவில்லை. பயணியின் பையில் வைத்திருந்த 'பவர் பேங்க்'கின் மூலம் தீப்பற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.