📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 11, 2026 11:03 PM

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து; பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து; பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து; பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி

மாற்று இண்டிகோ விமானம் மூலம் பயணிகள், விமான பணிப்பெண்கள் அனைவரும் மாலை 6 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

Published : October 11, 2026 at 10:24 PM IST

சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் லக்கேஜ் கேபினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்தனர்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று (அக்.11) மதியம் 1.10 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய நிலையில், 20 நிமிடங்கள் தாமதமாக மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 174 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 180 பேர் இருந்துள்ளனர்.

விமானம் நடுவானில் சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தபோது, விமானத்தின் உள்பகுதியில் பயணிகள் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் கேபினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் அளித்துள்ளனர்.

அப்போது விமானம், ஹைதராபாத் அருகே வந்த நிலையில், ஹைதராபாத் விமான நிலையத்தின் அவசர கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புக் கொண்டு பேசினார். அனுமதி கிடைத்ததை அடுத்து பிற்பகல் 3 மணியளவில் விமானத்தை விமானி அவசர அவசரமாகத் தரையிறக்கினார். அதற்குள் லக்கேஜ் கேபினில் தீ பற்றி எரிந்த நிலையில், பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கப் போராடினர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், "விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கு பயன்படும் பவர் பேங்கை தனது லக்கேஜுக்குள் வைத்து கேபினில் வைத்துள்ளார். அந்த பவர் பேங்கில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது" எனக் கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.