📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 11:03 PM

பிரதமருக்கு எதிராக போராட்டம்: வீட்டு காவலில் காங்., நிர்வாகிகள்

பிரதமருக்கு எதிராக போராட்டம்: வீட்டு காவலில் காங்., நிர்வாகிகள்

சென்னை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 15க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், போலீசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டுதல், கருப்பு பலுான்களை பறக்க விடுதல் போன்ற போராட்டங்களை நடத்த காங்கிரசார் திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த போலீசார், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிந்துஜா ராஜு, நவ்ஷத் அலி, ஆனந்த்பாபு, ரஞ்சித்குமார், வெளி மாநிலங்களிலிருந்து வந்து, ஓட்டலில் தங்கியிருந்த, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பிந்தியா, சிபினா உட்பட, 15க்கும் மேற்பட்டோரை, வீட்டு காவலில் வைத்தனர். நவ்ஷத் அலி, ஆனந்த்பாபு ஆகியோரின் வீடுகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட கருப்பு பலுான்கள், பதாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோட்டை விட்ட போலீஸ்வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள், நேற்று வாய் மற்றும் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முதல்வர் விஜய்க்கு எதிராக பதாகைகளை ஏந்தி இருந்தனர். இதை முன்கூட்டியே அறிந்து, சட்ட ரீதியான நடவடிக்கையில், ஈடுபட போலீசார் தவறி விட்டனர். போலீசாரை கண்டதும் அந்தப் பெண்கள் தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.