📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 04:03 PM

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து!

டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. SIR-க்கு எதிராகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் நாளை ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதால் நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவா் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகவும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரள்வதைத் தடுக்கும் வகையிலும், ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்குச் செல்லக்கூடிய மற்றும் டெல்லியிலிருந்து புறப்படக்கூடிய அனைத்து முக்கிய ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ரயில் ரத்து நடவடிக்கையால், தலைநகருக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகரில் சட்டஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு சிஜேபி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.