மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தலில் பாஜ அமோகம்; ஒரு லட்சம் ஓட்டில் பாஜ வேட்பாளர் முன்னிலை
நந்திகிராம்: மேற்கு வங்கத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் தொகுதிகளில் பாஜ முன்னிலை பெற்றுள்ளது. ரெஜிநகர் தொகுதி, ஏஜேயுபி கட்சியின் ஹூமாயூன் கபீர் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்று. அவர் ராஜினாமா செய்த நிலையில் நடந்த தேர்தலில் ரெஜிநகர் தொகுதியில் பாஜ வேட்பாளர் சர்கார் 48 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றுள்ளார். ஏஜேயுபி வேட்பாளர் குலாம் நபி ஆசாத் 13,600 ஓட்டு பெற்று 2வது இடத்திலும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் ரபியும் ஆலம் சவுத்ரி வெறும் 2,516 ஓட்டு பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
நந்திகிராம் தொகுதி, முதல்வர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று ராஜினாமா செய்த தொகுதி. இங்கு பாஜ வேட்பாளர் ஹசிரனி ராத் சுமார் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மிலின் பிரதான் 21,905 ஓட்டுடன் 2வது இடம் பிடித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாந்தி கோபால் கிரி 3,951 ஓட்டு பெற்றுள்ளார்.
அசாமின் நாகோன் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பாஜவின் தேவசிஷ் ஷர்மா, ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருதின் அஜ்மலை விட 96 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிபமோனி போரா 3வது இடத்தில் உள்ளார். இந்த தொகுதி, கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும்.