📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 09, 2026 01:03 PM

ஜெயிலர் 2 பட்ஜெட் இத்தனை கோடியா?.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜெயிலர் 2 பட்ஜெட் இத்தனை கோடியா?.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் பட்ஜெட்டே 400 கோடி அளவுக்கு சென்றது தான் அந்த படம் பெரிதாக வசூல் செய்ய முடியாமல் திணறியதும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் சுமையாக மாறியதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், ஜெயிலர் 2 படத்தின் பட்ஜெட் அதில் அப்படியே பாதி தான் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஜெயிலர் படத்தையே 200 கோடி பட்ஜெட்டில் எடுத்து 600 கோடி வசூலை கொடுத்தவர் தான் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால், சிவராஜ்குமார் என கேமியோவில் பெரிய நடிகர்கள் நடித்தாலும் அவர்கள் நடித்த நாட்கள் ரொம்பவே குறைவு என்பதால் பெரிய சம்பளம் எல்லாம் செல்லவில்லை என்கின்றனர்.

ஜெயிலர் 2 படத்திலும் மல்டி ஸ்டார் காஸ்டிங் உள்ள நிலையிலும், நெல்சன் அதை கச்சிதமாக படமாக்கிய நிலையில், படத்தின் பட்ஜெட் 400 கோடி, 500 கோடி என்றெல்லாம் எகிறவில்லை என்கின்றனர்.

ஜெயிலர் 2 பட்ஜெட்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் பட்ஜெட் 240 கோடி முதல் 300 கோடிக்குள் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளமும் இதில் அடங்கும் என்பது தான் ஹைலைட். படத்தின் மேக்கிங் 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டிலேயே நெல்சன் செய்து முடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் சம்பளம்: ஜெயிலர் 2 படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சம்பளமாக 110 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாகவும் படத்தின் லாபத்தில் கணிசமான ஒரு பங்கும் அவருக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் விஜய்க்குப் பிறகு 200 கோடி சம்பளம் எல்லாம் இனிமேல் வருமா என்பது டவுட்டு தான் என்கின்றனர். ஜெயிலர் 2 மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் சம்பளம் மற்றும் லாபத்துடன் சேர்ந்து கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 180 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பக்கா: இந்த வாரம் சூப்பர் ஷோ நிகழ்ச்சியுடன் ஜெயிலர் 2 படத்தின் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யு/ஏ சான்றிதழ் ஜெயிலர் 2 படத்துக்கு கிடைத்துள்ள நிலையில், கண்டிப்பாக ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே அக்டோபர் முதல் வார படங்களை பொறுமையாக ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

நெல்சன் சொதப்பாம இருக்கணும்: ஜெயிலர் படத்தைப் போலவே சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கடைசி வரை திருப்திப்படுத்தி அனுப்பினாலே நெல்சன் வெற்றிப் பெற்று விடுவார் என்கின்றனர். லால் சலாம், வேட்டையன், கூலி படங்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ஜெயிலர் 2 பக்கா ட்ரீட்டாக இந்த ஆயுத பூஜைக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசரா கலெக்‌ஷனை ஒட்டுமொத்தமாக அள்ள ஹுகும் டைகர் முத்துவேல் பாண்டியன் பராக்.