வங்கிகளின் வட்டி உயர்வு : பழைய FD ஐ உடைத்து புது FD க்கு மாறலாமா ? நிபுணர்கள் தரும் டிப்ஸ்
ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை உயர்த்தியிருக்கும் நிலையில் வங்கிகளில் வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளது. ரெப்போ ரேட் உயர்வால் வீட்டு கடன், கார் கடன் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு மாதாந்திர EMI உயரும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வங்கியில் FD வைத்திருப்பதர்களுக்கான வட்டி அதிகரிக்குமாம். இதனால் வங்கியில் FD வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஒருபக்கம் வங்கியில் கடன் வாங்கியவர்கள் ரெப்போ ரேட் உயர்வால் வருத்தத்தில் இருக்கும் அதே நேரத்தில் FD கணக்கு வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.இருந்தாலும் FD வைத்திருப்பவர்களிடம் ஒரு குழப்பம் நிலவி வருகின்றது. அதாவது பழைய FD ஐ உடைத்து அதிக வட்டி தரும் புது FD க்கு மாறலாமா ? அவ்வாறு மாறினால் லாபமா ? நஷ்டமா ? என்ற குழப்பமும் கேள்வியும் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கின்றதுரெப்போ ரேட் உயர்வால் வட்டி விகிதங்கள் உயர்ந்திருக்கும் நிலையில் ஏற்கனவே குறைந்த வட்டியில் முதலீடு செய்திருக்கும் பழைய FD ஐ உடைத்து புதிய அதிக வட்டி தரும் FD க்கு மாற பல முதலீட்டாளர்கள் விருப்பம் காட்டி வருகின்றனர். இது பார்ப்பதற்கு லாபம் போல தெரிந்தாலும் முன்கூட்டியே FD ஐ முறிப்பதினால் சில நஷ்டங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். எனவே பழைய FD ஐ முறித்து புது திட்டத்திற்கு மாறுவதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்FD முன்கூட்டியே முறிப்பதற்கான அபராதம் கணக்கீடுஉங்களுடைய FD ஐ முன்கூட்டியே முறிக்கும் வங்கிகள் உங்களுக்கு இரண்டு வழிகளில் வட்டியை குறைக்கின்றனபெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் FD ஐ முன்கூட்டியே முறிப்பதற்கு 0.50% முதல் 1.00% வரை அபராத கட்டணம் விதிக்கப்படுகின்றனஉதாரணத்திற்கு நீங்கள் ஐந்து ஆண்டு கால FD ஐ 7.5% வட்டியில் துவங்கி இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் இரண்டே ஆண்டுகளில் நீங்கள் FD ஐ முறித்தால் வாங்கி உங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான 7.5% வட்டியை தராது. நீங்கள் டெபாசிட் செய்யும்போது இரண்டு ஆண்டுக்கு என்ன வட்டி விகிதம் இருந்ததோ அதிலிருந்து 1.00% அபராதத்தை கழித்துவிட்டு தான் தரும்FD யை முறிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்FD ஐ முறித்து அபராதம் கட்டி நஷ்டத்தை எதிர்கொள்வதற்கு பதில் நாம் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றலாம்அவசரமான பண தேவை ஏற்படும்போது FD ஐ முறிக்காமல் அதன் மீது கடன் வாங்கலாம். உங்களுக்கு பணமும் கிடைக்கும் ,FD கணக்கும் தொடரும்FD ஐ முழுமையாக உடைக்காமல் Partial Withdrawal முறையில் குறிப்பிட்ட தொகையை திரும்ப பெறலாம்மொத்த பணத்தையும் ஒரே FD யில் போடாமல் FD Laddering முறையில் பிரித்து பிரித்து போடலாம்