இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமாகா ஆதரவு; வாசன் அறிவிப்பு
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமாகா ஆதரவு என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய தவெக அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற தவெகவின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் த.வெ.க கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சிறப்பு வீடியோ!
இடைத்தேர்தலில் விஜய்க்கு தமாகா ஆதரவு; இபிஎஸ்க்கு வாசன் கொடுத்த அதிர்ச்சி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்