இடைத்தேர்தல்: "முதல்வர் அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்"
இடைத்தேர்தல்: "முதல்வர் அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்"- தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே வாசன்
"தமிழகத்தில் 60 துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க அரசு விளங்குகிறது"- ஜி.கே வாசன்
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தமிழகத்தில் 60 துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க அரசு விளங்குகிறது. ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற த.வெ.க வின் தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் நம் முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே புதிய த.வெ.க அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் த.வெ.க கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) ஆதரவளிக்கிறது என்பதை த.மா.கா(மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.