📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 04:03 PM

“இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்பதில்லை”

“இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்பதில்லை”

திமுக வேட்பாளர் பரந்தாமன்

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் ​(தவெக), பரந்​தாமன் (தி​முக), கணிதா சம்​பத்​(அ​தி​முக), சுகந்தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ரா​மன் (நாம் தமி​ழர்) மற்​றும் சுயேட்​சை​கள் உட்பட 27 பேர் களத்​தில் உள்​ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் நான் மீறவில்லை. தவெகவின் புகாரை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளேன். தவெகவின் குதிரைபேரத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டதால் ஆதவ் அர்ஜுனா பதறிவிட்டார். அவர் கொடுத்துள்ளது உப்புசப்பில்லாத புகார். அந்தப் புகாரை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் திமுக சந்திக்கத் தயாராக உள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும். மதுராந்தகத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெறும். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது, அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்” என்றார்.