இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக களமிறங்கியதன் மூலம், 150 டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் கிரிக்கெட் வீராங்கனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்த ஆட்டம், ஹர்மன்பிரீத் கவுரின் வரலாற்றுச் சாதனை போட்டியாகவும் அமைந்தது.
சாதனை குறித்து பேசிய ஹர்மன்பிரீத் கவுர், “நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இந்திய அணியை இத்தனை போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி” என்ற உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்தார்.