📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 13, 2026 04:37 PM

இணையத்தை ஆளும் ‘80s ரெட்ரோ’ மேஜிக்

இணையத்தை ஆளும் ‘80s ரெட்ரோ’ மேஜிக்

முதல்​வர் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள் ‘வின்​டேஜ்’ உடை​யில் இருப்​பது​போல வலை​தளங்​களில் வைரலாகி வரும் ஏஐ புகைப்​படம்​.

சென்னை: செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தின் அசுர வளர்ச்​சி, அன்​றாட வாழ்க்​கை​யின் தகவல் தேவை​களை தாண்டி மனிதர்​களின் கற்​பனைத் திற​னுக்கு தற்​போது புதிய சிறகு​களைக் கொடுத்​துள்​ளது. எதிர்​காலத்​தில் நாம் எப்​படி இருப்​போம், அனிமேஷன் பாணி​யில் நம் முகம் எப்​படி இருக்​கும் என வியக்க வைத்த ஏஐ செயலிகள், தற்​போது இணை​ய​வாசிகளை அப்​படியே நான்கு தசாப்​தங்​கள் பின்​னோக்கி இழுத்​துச் சென்று 1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலவ விட்​டிருக்​கின்​றன.

‘Back to the 80s’ என்ற தலைப்​பில் சமூக வலை​தளங்​களில் புயலைக் கிளப்பி வரும் இந்த ரெட்ரோ புகைப்​படங்​கள், இளைஞர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை அனை​வரை​யும் ஒருங்கே கட்​டிப்​போட்​டுள்​ளன.

சாட்​-ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ தொழில்​நுட்​பங்​களின் துணை கொண்டு உரு​வாக்​கப்​படும் இந்த புகைப்​படங்​கள், 80-​களின் பொற்​கால நினை​வு​களை கண்​முன்னே அச்சு அசலாக நிறுத்​துகின்​றன.

அக்​காலத்​தில் பெரும் அலையை ஏற்​படுத்​திய அகல​மான காலர் வைத்த வண்​ணமய​மான சட்​டைகள், பூட்​கட் மற்​றும் பெல்​பாட்​டம் பேன்ட்​கள், தலை நிறைய சுருள் முடி அலங்​காரம், பெரிய ஃப்​ரேம் போட்ட கண்​ணாடிகள் என அத்​தனை அம்​சங்​களும் தத்​ரூப​மாக மறுஉரு​வாக்​கம் செய்​யப்​படு​கின்​றன.

பின்​னணி​யில் கம்​பீர​மாக நிற்​கும் அம்​பாசிடர் கார்​கள், பழைய தெருக்​கள், வின்​டேஜ் ஸ்டுடியோ விளக்​கு​கள் என ஒவ்​வொன்​றும் ரெட்ரோ அழகியலை தூக்​கிப் பிடிக்​கின்​றன. இதற்கு தகுந்​தாற்​போல இளை​ய​ராஜா, ரஜினி, கமல், சுஹாசினி, ராதிகா ஆகி​யோரின் கிளாசிக் பாடல்​களை பின்​னணி​யாக இணைத்து இன்​ஸ்​டாகி​ராம், முகநூலில் நெட்​டிசன்​கள் வெளி​யிடும் பதிவு​கள் சமூக வலை​தளங்​களை வண்​ணமய​மாக்கி வரு​கின்​றன.

சாதாரண மக்​கள் மட்​டுமல்​லாமல், திரை​யுல​கினர், அரசி​யல் பிர​முகர்​களின் வின்​டேஜ் புகைப்​படங்​களும் வலைதளங்களில் பரவலாக வலம் வரு​கின்​றன.

அந்த வகை​யில், சமீபத்​தில் முதல்​வர் விஜய்​யுடன், அமைச்​சர்​கள் என்.ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, நிர்​மல்​கு​மார், செங்​கோட்​டையன், அருண்​ராஜ் ஆகி​யோர் 80-​களின் வின்​டேஜ் உடைகளில், கிளாசிக் மெர்​சிடிஸ்​-பென்ஸ் வின்​டேஜ் ரக காரில் சாய்ந்​த​படி கம்​பீர​மாக நிற்​கும் ஏஐ புகைப்​படங்​கள் தற்​போது தவெக தொண்​டர்​கள், இணை​ய​வாசிகள் மத்​தி​யில் வைரலாகி வரு​கின்​றன. இதே​போல திரை​யுல​கினர் பலரும் தங்​களது ரெட்ரோ தோற்​றங்​களை உற்​சாக​மாக பகிர்ந்து வரு​கின்​ற​னர்.