📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 13, 2026 04:37 PM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு; மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு; மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சல் ஏற்பட்ட 4,500 பேரில் 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

டெங்கு பாதிப்பு

மருத்துவர்கள் அறிவுறுத்தல்

இதனையடுத்து, இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி. உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வருகின்றன என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், அது மற்றவர்களுக்கும் விரைவாக பரவக்கூடும். அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொசுக்கள் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகளில் தண்ணீர் தேங்கவிடாமல், சுற்றுப்புற தூய்மையை பேணும்படியும், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கவும் மருத்துவர்கள் தீவிர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.