📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 12:03 PM

இணைந்து செயல்படும்போது தமிழ்ச் சமூகம் செழித்தோங்குவதோடு சிங்கப்பூரும் வலிமைபெறும்: பிரதமர் லாரன்ஸ் வோங்

இணைந்து செயல்படும்போது தமிழ்ச் சமூகம் செழித்தோங்குவதோடு சிங்கப்பூரும் வலிமைபெறும்: பிரதமர் லாரன்ஸ் வோங்

அனைவரும் இணைந்து செயல்படும்போது தமிழ்ச் சமூகம் செழித்தோங்குவதோடு சிங்கப்பூரும் மேலும் வலிமைபெறும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'தி ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா சிங்கப்பூர்' ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் பேரவையின் 75ஆம் ஆண்டு பவள விழா இரவு விருந்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது வோங் இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர்த் தமிழர்களின் புதிய தலைமுறையினர் தங்களது பண்பாட்டு மரபைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தோடு பிணைந்திருக்கவும், தங்களது தமிழ், சிங்கப்பூர் என்ற இரு அடையாளங்கள்மீது பெருமிதம்கொள்ளவும் தமிழர் பேரவை போன்ற சமூக அமைப்புகள் இன்றியமையாத பங்காற்றி வருவதாக வோங் பாராட்டினார்.

'இணை' எனப்படும் இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவைச் சுட்டிக்காட்டிய அவர், 75 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழர் பேரவை அமைப்புகளை ஒன்றிணைத்த வழியிலேயே அக்குழுவும் செயல்படுகிறது என்றார்.

தமிழர் பேரவை பவள விழாக் கொண்டாட்ட நிகழ்வில் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், 42 இணை அமைப்புகளின் பேராளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழர் பேரவையின் 75 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை விவரிக்கும் நினைவு மின்னூலும் பேரவையின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமும் வெளியீடு கண்டன.