📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 05, 2026 09:04 PM

I'm Game Box Office: துல்கர் சல்மானுக்கு கை மேல் பலன் தந்ததா ஐ ஆம் கேம்?.. 2 நாள் வசூல் எப்படி?

I'm Game Box Office: துல்கர் சல்மானுக்கு கை மேல் பலன் தந்ததா ஐ ஆம் கேம்?.. 2 நாள் வசூல் எப்படி?

சென்னை: துல்கர் சல்மான் தயாரித்து நடித்த ஐ ஆம் கேம் திரைப்படம் மலையாளத்தில் செப்டம்பர் 3ம் தேதி வெளியானது. தமிழில் நேற்று வெளியானது. பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை போலவே இந்த மலையாள படத்துக்கும் தமிழ்நாட்டில் பெரிதாக ஓபனிங் இல்லை.

ஆர்டிஎக்ஸ் படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான், கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாத், மிஷ்கின், கதிர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத்திலேயே 200 கோடி வசூல் செய்து மாஸ் காட்டிய நிலையில், 85 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள துல்கர் சல்மானின் ஐ ஆம் கேம் திரைபடத்தின் 2 நாள் வசூல் என்ன ஆனது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ஐ ஆம் கேம்: வழக்கம் போல தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக துல்கர் சல்மான் இந்த படத்திலும் சோலோவாக சில காட்சிகளை ஒட்டுமொத்தமாக டேக் ஓவர் செய்து நடித்து அசத்துகிறார். ஆனால், 2வது பாதியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆண்டனி வர்கீஸ் காட்சிகள் வரும் போது டோட்டலாக துல்கர் சல்மான் மறைந்து போவது தான் அவரது ரசிகர்களை பெரிதளவிலும் ஏமாற்றியுள்ளது. ஆனாலும், கதைக்கு தேவையான விஷயத்தை துல்கர் சல்மான் செய்துள்ள நிலையில், படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

2 நாள் வசூல் எப்படி?: முதல் நாளில் 2727 காட்சிகள் ஓடிய நிலையில், சுமார் 5.40 கோடி வசூலை ஐ ஆம் கேம் திரைப்படம் அள்ளியது. வெள்ளிக்கிழமையான நேற்று வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3145 காட்சிகளாக உயர்த்தப்பட்ட நிலையிலும், சுமார் 4.60 கோடி தான் வசூல் வந்தது. இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியளவில் ஐ ஆம் கேம் திரைப்படம் 10.06 கோடிவசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனி மற்றும் ஞாயிறு மேலும் ஒரு 10 முதல் 15 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெத்லகேம் குடும்ப யூனிட் அளவுக்கு இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.