📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 02, 2026 05:03 PM

சிங்கப்பூரர்கள் மோசடி சம்பவங்களைச் சமாளிக்க புதிய உத்தி

சிங்கப்பூரர்கள் மோசடி சம்பவங்களைச் சமாளிக்க புதிய உத்தி

அரசாங்கத்தின் தொழில்நுட்ப நிறுவனமான ‘கவ்டெக்’ மோசடிச் சம்பவங்களுக்கு எதிராகப் போராட புதிய உத்தியை வகுத்துள்ளது.

‘கவ்டெக்’கின் அரசாங்கத் தயாரிப்புகள் பிரிவு (ஓஜிபி) தொடங்கிய ‘ஸ்கேம் வேக்சின்’ என்ற தளமே அந்தப் புதிய உத்தி.

இதன்மூலம் உண்மையான மோசடிச் சம்பவங்கள் எப்படியிருக்கும் என்ற அனுபவத்தைச் சிங்கப்பூரர்கள் நேரடியாகப் பெறமுடியும். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் இந்தத் தளம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் பதிவு செய்யும் பங்கேற்பாளர்கள், கட்டுப்பாடான, பாதுகாப்பான சூழலில் நேரடி, முன்கூட்டியே திட்டமிடப்படாத மோசடிகளைப் போன்ற தொலைபேசி அழைப்புகளையும் வாட்ஸ்அப் செய்திகளையும் பெறுவர்.

புதிய மோசடிகளைக் கண்டறிவதற்கும் அதைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஓஜிபியின் தலைமைத் தயாரிப்பு நிர்வாகியான டே பால் ஹோங் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதத்தில் கவ்டெக்கின் நல்ல நோக்கத்திற்கான இணைய ஊடுருவல் நிகழ்ச்சியின்போது ஸ்கேம் வேக்சின் தளத்தை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டது.

“உண்மையான மோசடியைச் சந்திப்பதற்கு முன்பே மோசடிகளில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியுமா என்பதை சோதிக்கக் குழு விரும்பியது,” என்றார் அவர்.

செப்டம்பர் 20ஆம் தேதி பதிவு தொடங்கியதிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதிவரை 700க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதில் பதிந்துகொள்ள தங்களுடைய பெயர், சிங்கப்பூர் கைப்பேசி எண், வயது உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவர்களுக்கு மோசடி நபர்களிடமிந்து வருவது போன்ற கைப்பேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.

2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பதிவான மோசடிகளில் அரசு அதிகாரிபோல ஆள்மாற்றம் செய்வது, மின்-வணிகம், முதலீடு, காதல் வலை உள்ளிட்ட மோசடிகளும் அடங்கும்.

காவல்துறை, உள்துறை அமைச்சு, தேசிய குற்றத் தடுப்பு மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து ஓஜிபி உருவாக்கிய ‘ஸ்கேம்ஷீல்ட்’ தளத்தில் பொதுமக்கள் சமர்ப்பிக்கும் புகார்களிலிருந்து புதிய வகை மோசடிகள் கண்டறியப்படுகின்றன.

பொதுமக்கள் தங்களுடைய கைப்பேசிகளில் ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். இது, பின்னணியில் இயங்கி, அதிகாரபூர்வ ‘ஸ்கேம்ஷீல்ட்’ தரவுகளின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொலைபேசி எண்களிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுத்து நிறுத்தும்.