📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 30, 2026 10:02 PM

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை அரக்கன் என கூறிய டிரம்ப்; வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை அரக்கன் என கூறிய டிரம்ப்; வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை அரக்கன் என டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான கூட்டம் ஒன்று நடந்தது. இதில், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, மெட்டா சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவன சி.இ.ஓ. டேரியோ அமோடி உள்ளிட்ட பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டிரம்ப் பாராட்டு

இந்த கூட்டத்தில் ஏ.ஐ.-யின் பாதுகாப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டதுடன், நவீன ஏ.ஐ.-யை கண்காணிக்கும் பணியை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை முன்னிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், அவர்களிடம் சுந்தர் பிச்சையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை பற்றி குறிப்பிட்ட டிரம்ப், இவர் ஓர் அரக்கன். யாருக்கும் அது தெரியாது என்று புகழ்ந்து பேசினார். அவர் இப்படி பேசியதும் தலைகுனிந்து கொண்டு சிரித்தபடியே நின்ற சுந்தர் பிச்சை, ஒரு கட்டத்தில் புகழ்ந்தது போதும் என்பதுபோல் இந்திய பாணியில், சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டார்.

🚨😂 COMEDIC GOLD OUTSIDE THE WHITE HOUSE!🇺🇸 TRUMP: “Sundar [Pichai], you wanna say something?”🇮🇳 PICHAI: “First of all, thanks—”😂 TRUMP: “This guy is a MONSTER, and nobody knows him. What a great life! To be a MONSTER and not have to go through this. All you have to know… pic.twitter.com/pIAP5vg4oN

சூப்பர் நுண்ணறிவு

டிரம்ப்பும் சிரித்தபடி, தட்டிக்கொடுத்து தன்னுடைய பாராட்டுதல்களை வெளிப்படுத்தினார். தொழில் நுட்ப துறையில் சுந்தர் பிச்சையின் செல்வாக்கு மற்றும் அதில் அவர் பெற்ற வெற்றி ஆகியவற்றை புகழும் வகையில் அவரை டிரம்ப் அப்படி குறிப்பிட்டார்.