📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 10:01 PM

செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்!

செலிப்ரிட்டி vs காமன் மேன்.. பிக் பாஸ் 10 வீட்டை அலறவிடப் போகும் 19 போட்டியாளர்கள்.. ஃபைனல் லிஸ்ட்!

சென்னை: சின்னத்திரையின் மிகப்பெரிய பிரம்மாண்ட திருவிழாவான பிக் பாஸ் சீசன் 10 வழக்கமான பாணியில் இல்லாமல், நெஞ்சை படபடக்க வைக்கும் புதிய எலிமினேஷன் முறையோடு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறை மேடைக்கே 3 போட்டியாளர்களை வரவழைத்து, நேரடி ஆடியன்ஸ் வோட்டிங் நடத்தி, அதில் வாக்குகளை அள்ளிய முன்னணி போட்டியாளர்களை மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

சீரியல் நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள், டிஜிட்டல் கிரியேட்டர்கள் மற்றும் வரலாற்றிலேயே முதல்முறையாகக் காமன் மேன் என 19 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே கெத்தாகக் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் முழுமையான போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

லட்சுமி பிரியா: விஜய் டிவியின் 'மகாநதி' சீரியலில் 'காவேரி' கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டானவர். போல்டான பேச்சு மற்றும் நகைச்சுவையான கண்டென்ட்டிற்கு பெயர் பெற்றவர்.

சாந்தினி தமிழரசன்: 2010 ஆம் ஆண்டு வெளியான சாந்தனு நடித்த 'சித்து +2' படம் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகை.

பிளாக் பாண்டி: 'அங்காடித் தெரு' படம் மூலம் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். சமூகச் சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் என்ட்ரி கொடுத்துள்ளார்.

வினோத் பாபு: விஜய் டிவியில் வெற்றி பெற்ற தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்த இவர், கடந்த சில சீசன்களாக எதிர்பார்க்கப்பட்டு, இம்முறை களமிறங்கியுள்ள சீரியல் நடிகர் மற்றும் நடனக் கலைஞராவர்.

குமரன்: அமைதியான நல்ல பையன் தான் என்ற இமேஜுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பிரபல சின்னத்திரை நடிகர் குமரன். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சில வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

ராகவன் ரகுநாதன்: நடிப்பு, மியூசிக், டான்ஸ் என பல தொலைக்காட்சிகளிலும் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். பல துறைகளில் கலக்கும் மல்டி-டேலண்டட் கலைஞர்.

முத்தழகி: பல சீரியல்கள், ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து சோஷியல் மீடியாவில் பட்டையை கிளப்பும் நடிகை தான் முத்தழகி. இவர் இன்ஸ்டாகிராமிலும் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார்.

ஷாதிகா: மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகையான இவர் 'Get Ready With Me' சோஷியல் மீடியா பிரபலமானார் இவர். பிக் பாஸ் வீட்டில் கலக்கப்போகிறார்.

பிரித்திவிநாத்: சேலத்தை சேர்ந்த பிரித்வி சேலத்தை வேர்ந்தவர், இவர் ஜெர்மனி சேர்ந்த பிரபல ஃபன்னி கண்டென்ட் கிரியேட்டர்; இளம் தலைமுறையின் பிரதிநிதியாக வந்துள்ளார்.

நடிகை தான்யா: 'ரெசாட்' வெப் சீரிஸ் மூலம் ட்ரெண்டாகி, பிக் பாஸ் என்ட்ரிக்கு முன்பே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர்.

அஷ்மிதா: பிரபலங்களின் திருமணங்களுக்கு மேக்கப் செய்யும் விஐபி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.

அவினாஷ்: தனது சகோதரி அக்ஷிதாவுடன் மேடை ஏறி, ஆடியன்ஸ் வோட்டிங்கில் சகோதரியை வீழ்த்தி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் நடனம், நடிப்பு என அனைத்திலும் திறமையானவர்.

முகேஷ்: விஜய் டிவி பின்னணியில் பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளில் பணியாற்றிய தொழில்முறைக் கலைஞர்.

அன்சார்: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைச் சிரிப்பு மழையில் நனையவைத்த பிரபலம்.

ஸ்வாமிகா: சின்னத்திரை மற்றும் சோஷியல் மீடியா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்த இளம் போட்டியாளர்.

ஜாவித்: சஸ்பென்ஸ் எலிமெண்ட்டாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர்.

சாமானிய மக்கள்: கிராமத்துப் பின்னணியுடன் தனது எதார்த்தமான பேச்சுத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர் முனியம்மா. அதே போல ஜேசன், ஷமா என 3 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து கடினமான சவால்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

ஆரம்பமே அமர்க்களம்... அடுத்து என்ன? ஏற்கனவே ஒருவரையொருவர் நன்கு அறிந்த லட்சுமி பிரியா - ஷாதிகா கூட்டணி நண்பர்களாக இருப்பார்களா அல்லது சண்டை போடுவார்களா?, அமைதியான குமரனின் கேம் எப்படி மாறப்போகிறது? காமன் மேன் போட்டியாளர்கள் செலிப்ரிட்டிகளுக்கு டஃப் ஃபைட் கொடுப்பார்களா என முதல் நாளிலேயே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.