📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 09:03 PM

ஆடையணியாமல் நிர்வாணமாக ஓடி புரமோஷன் செய்த அசோக் செல்வன்.. அன்பில் அவன் 2 நாள் வசூல் எவ்வளவு?

ஆடையணியாமல் நிர்வாணமாக ஓடி புரமோஷன் செய்த அசோக் செல்வன்.. அன்பில் அவன் 2 நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: அசோக் செல்வன் எப்படியாவது இந்த முறை ஹிட் அடித்து விட வேண்டும் என்கிற நம்பிக்கையில் அன்பில் அவன் படத்தை தானே தயாரித்து நடித்தார். ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அக்டோபர் 2ம் தேதி வெளியான அன்பில் அவன் படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், ரேவதி நடிப்பில் வெளியான அன்பில் அவன் திரையரங்குகளில் இந்த வாரம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியானது. டோரதி, மீசைய முறுக்கு 2 படங்கள் வெளியான போதே செப்டம்பர் 25ம் தேதி அன்பில் அவன் படம் வெளியாகி இருந்தால் கண்டிப்பாக இன்னமும் அதிக வசூலை படம் அள்ளியிருக்கும் என்கின்றனர்.

இந்த வாரம் வெளியான தமிழ் படங்களிலேயே குறைவான வசூலை அன்பில் அவன் தான் எடுத்துள்ளது என்றும் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்த ஏழு கடல் ஏழு மலை படம் கூட இந்த படத்தை விட சற்று கூடுதல் வசூலை அள்ளியுள்ளது என்கின்றனர்.

ஆடையணியாமல் நிர்வாணமாக ஓடிய அசோக் செல்வன்: எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் இன்றி அசோக் செல்வன் 70 அடி உயரத்தில் குதித்த காட்சியை எப்படி படமாக்கினோம் என 'தி ஜம்ப்' எனும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். நடிகர் சூர்யா அந்த வீடியோவை ஷேர் செய்ய ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் பார்த்தனர். ஆனால், அனைவரையும் ஷாக் ஆக்கும் அளவுக்கு திடீரென ஒரு காட்சியில் அந்த ஜம்ப் பண்ணுவதற்கு பயிற்சி எடுத்த காட்சியில் கடலில் ஆடையின்றி முழு நிர்வாணமாக அசோக் செல்வன் ஓடிய காட்சி இடம்பெற்று பலரையும் அப்செட் ஆக்கியது. ஜட்டி கூட அணியாமல் மொத்த பேக்கும் தெரியும் படி அசோக் செல்வன் ஓடிய நிலையில், அவர் கஷ்டப்பட்டு 70 அடி உயரத்தில் குதித்த காட்சி டிரெண்ட் ஆவதற்கு பதில் இந்த ஒரு சிங்கிள் பிட்டு சீன் மூலம் நெகட்டிவிட்டியே பரவின.

படத்தில் பெரிதாக ஒர்க் ஆகவில்லை: அசோக் செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சி படத்தின் முக்கிய காட்சி போல மிஷன் இம்பாசிபிள் படத்தில் வருவது போல கதைக்கு தேவைப்பட்டு இருந்தால் இந்நேரம் அந்த காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கும் என்கின்றனர். ஆனால், அசோக் செல்வன் ஒரு பயமறியாதவன் என்பதை காட்ட ஆரம்பத்திலேயே அந்த காட்சி வந்து சென்றது. ஆனால், ஆயுதங்களுடன் வீட்டை எம்.எல்.ஏ ஆட்கள் சுற்றுப்போட அனைவரையும் கொன்று குவிக்கும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும் படியாக இல்லை என்கிற விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், படம் வசூலில் அடிவாங்கி வருகிறது.

அன்பில் அவன் 2 நாள் வசூல்: 2 வருட உழைப்பைப் போட்டு அசோக் செல்வன் செம ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்தாலும், அன்பில் அவன் திரைப்படம் 2 நாட்களில் 1.1 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமையான இன்று மேலும், 1 கோடி ரூபாய் வசூலை கடந்தாலும் இந்த படம் அதிகபட்சம் 3 முதல் 5 கோடி ரூபாய் வருவதே கஷ்டம் தான் என்கின்றனர்.