📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 04, 2026 10:03 PM

தவெக மீது அதிருப்தியா? நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு

தவெக மீது அதிருப்தியா? நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு அக்கட்சியில் பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தவெகவுக்காக தீவிர பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் ஈடுபட்டார்.

தவெக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த நாஞ்சில் சம்பத்திற்கு தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் நாஞ்சில் சம்பத் வெளியிட்டு இருக்கும் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் சம்பத் பதிவிட்டு இருப்பதாவது: “போனால் போகட்டும் போடா..இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..என்னுடைய பகலை யவரும் இருட்டாக்க முடியாது..என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது..என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். தவெக மீதான அதிருப்தியில் நாஞ்சில் சம்பத் இந்த பதிவை இட்டுள்ளாரா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.