📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 04, 2026 10:03 PM

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தையைப் பயன்படுத்தியதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தாராபுரம் டவுன், பெரியார் சிலை அருகே நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சரை அவமானப்படுத்தும் வகையில் குழந்தையை பேச வைத்ததாகவும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் குழந்தையைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரசார நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த விதிமுறையை மீறியதாக எழுந்த புகாரின்பேரில், உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.