📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 02, 2026 01:02 AM

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு சென்னையில் ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை: டீ, காபி, உணவுப் பண்டங்கள் விலை உயரும்; பொதுமக்கள் தல

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு சென்னையில் ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை: டீ, காபி, உணவுப் பண்டங்கள் விலை உயரும்; பொதுமக்கள் தல

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு சென்னையில் ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை: டீ, காபி, உணவுப் பண்டங்கள் விலை உயரும்; பொதுமக்கள் தலையில் கூடுதல் சுமை

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைந்து வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாகச் சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து எரி பொருட்களின் விலையும் உயர்ந்தது. குறிப்பாகச் சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஜனவரி மாதத்தில் ரூ.110, மார்ச்சில் ரூ.144, ஏப்ரல் மாதம் ரூ.203, மே மாதம் ரூ.990, ஜூன் மாதத்தில் ரூ.46 என விலை உயர்த்தப்பட்டது. இதனால் பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. டீ, காபி, ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது.

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தணிந்ததன் காரணமாகக் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ரூ.200 வரை குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து ரூ.2,916.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அக்டோபர் மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்து, ரூ.2,983க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பருவமழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வணிக எரிவாயு விலை உயர்வு மேலும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இனிவரும் மாதங்களில் இந்தியா முழுவதும் பண்டிகை நாட்கள் வரவுள்ளதால் இனிப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் என்பதால், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாக மாற்றக்கூடும் என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.