வறுமையை தகர்த்தெறிந்து இந்தியாவிற்கு தங்கம் வென்ற நீரு தண்டா!
- நமது சிறப்பு நிருபர்
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை நீரு தண்டா, தனி நபர் டிராப் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். ஆஷிமா, அஹ்லாவத், மனிஷா கீர் ஆகியோருடன் இணைந்து மகளிர் பிரிவில் வெள்ளி வென்று சாதனை படைத்தார்.
ரேஷன் கடையில் தாயார்
இந்த சாதனையை படைக்க நீரு தண்டா கடுமையாக போராட வேண்டியிருந்தது. 26 வயதான இவர், ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றுகிறார். ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த இவரது குடும்பம் எளிமையான பின்னணி கொண்டது. தந்தை விவசாயி. தாயார் குடும்பத் தலைவி. பொது விநியோக திட்டத்தை நம்பி வாழ்கின்றனர்.
நீரு தண்டா பதக்கம் வென்ற போது தாயார், ரேஷன் கடையில் வறுமைக்கோட்டீற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டையை பயன்படுத்தி கோதுமை வாங்கி கொண்டு இருந்தார்.
இரவல் வாங்கி
துப்பாக்கிச்சுடும் போட்டி பயிற்சிக்கு என பிரத்யேகமாக துப்பாக்கி, பயிற்சி, உபகரணங்கள் தேவை. லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், இது எதுவும் நீரு தண்டாவிற்கு கிடைக்கவில்லை.
தந்தை விவசாயத்திற்காக வைத்திருந்த பழைய துப்பாக்கி வாயிலாக, பழைய தகரத் குப்பிகளை பயன்படுத்தி பயிற்சி செய்தார்.
உறவினரான லக்சயா ஷியோரன் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றார். அவரை பார்த்து நீரு தண்டாவும் உத்வேகம் பயிற்சியில் ஈடுபட்டார். இதற்கு முதலில் சொந்தமாக துப்பாக்கிகூட அவரிடம் இல்லை. கடன் வாங்கி தான் பயிற்சி துவங்கியதாக அவரது தந்தை கூறினார்.
மருத்துவமனையில்
விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகையில், '' நீரு தண்டாவை போல் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என தெரியவில்லை. எத்தனை சாதனையாளர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது என்ற கேள்வி எழுகிறது. நீரு தண்டா எது சாத்தியம் என்பதை காட்டியுள்ளார். அவரை பின்பற்றும் அமைப்பை இந்தியா உருவாக்க வேண்டும். வெற்றி பெற்ற தடகள வீரர்களை கொண்டாடும் அமைப்பை விட, அவர்களுக்கு உதவும் அமைப்பே இந்தியாவிற்கு தேவை,'' என்றனர்.