📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 28, 2026 01:03 AM

வங்கிகள் வேலைநிறுத்தம்: கணக்குகளில் KYC பிரச்சினை முதல் காசோலைகள் மாற்றம் வரை! அலசும் ஈடிவி பாரத்

வங்கிகள் வேலைநிறுத்தம்: கணக்குகளில் KYC பிரச்சினை முதல் காசோலைகள் மாற்றம் வரை! அலசும் ஈடிவி பாரத்

வங்கிகள் வேலைநிறுத்தம்: கணக்குகளில் KYC பிரச்சினை முதல் காசோலைகள் மாற்றம் வரை! அலசும் ஈடிவி பாரத்

வங்கி மூன்று நாள் வேலைநிறுத்தத்தின்போது ஏடிஎம்களில் போதுமான பணம் இருக்குமா என்பது பொதுமக்களின் அடிப்படை கேள்வியாக உள்ளது.

Published : September 27, 2026 at 12:20 PM IST

-Reported by சௌரப் சுக்லா | சஞ்சல் முகர்ஜி | அங்கிதா குமாரி

புது டெல்லி: செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு வங்கி வேலைநிறுத்தம் அறித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தங்களின் அவசர வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், பணத்தை எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்டம்பர் 27) வங்கிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கி வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மூன்று நாட்களிலும், ஏ.டி.எம்-கள் மூலமாகவும், ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

#UFBU pic.twitter.com/cbEmqRu7KU

எனினும், மூன்று நாள் வேலைநிறுத்தத்தின்போது தொடர்ந்து பணப்புழக்கத்தை உறுதி செய்ய ஏடிஎம்களில் போதுமான பணம் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வங்கி தொழிற்சங்கங்கள், தொழில்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஈடிவி பாரத் மூலமாக கருத்துகள் கேட்கப்பட்டன.

ஏ.டி.எம்-களில் போதுமான பணம் இருப்பு

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பணம் கையாளுதல் மற்றும் பணப் போக்குவரத்து சேவை நிறுவனமான எஸ்.ஐ.எஸ்-ன் நிர்வாக இயக்குநர் ரிதுராஜ் கிஷோர் சின்ஹா கூறியபோது, “வங்கி வேலைநிறுத்தத்தின்போது பணம் எடுப்பது அதிகரிக்கும் என எதிபார்க்கபப்டுவதால், ஏ.டி.எம்-களில் போதுமான அளவு பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவைக்கேற்ப பணத்தை மீண்டும் நிரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வேலைநிறுத்த காலத்திலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படாத வகையில், ஏ.டி.எம்-களில் தொடர்ந்து பணம் கிடைப்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறப்பதன் நோக்கம் என்ன?

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் பேசியபோது, “வேலைநிறுத்தத்திற்கு முன்பாக ஏ.டி.எம்-களில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்வதும், அவற்றை மீண்டும் நிரப்புவதுமே ஞாயிற்றுக்கிழமையான இன்று வங்கிகள் திறக்கப்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

Management Divides, Solidarity Unites.Clear Facts Over Management Pressure: Every Member Has the Right to Strike. #UFBU https://t.co/qoHYQ0AUmK

பணத்தை கையாளும் நிறுவனங்கள் மூலம் ஏ.டி.எம்-களுக்கு தேவையான பணத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் முன்கூட்டியே பணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதால், ஏ.டி.எம்-களில் தொடர்ந்து பணம் நிரப்பப்படுவது அடுத்த சில நாட்களுக்கான பணத்தேவையை சமாளிக்க உதவும்.

அதே நேரத்தில், டிஜிட்டல் வங்கி சேவைகள், யு.பி.ஐ, இணைய வங்கி சேவைகள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் முழுமையாக வங்கிக் கிளைகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை தற்போது இல்லை.

#UFBU #AIBEAhttps://t.co/j20RDRQAr1 pic.twitter.com/i6z38zY5zA

வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. வேலைநிறுத்தம் குறித்து அரசிற்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டுவிட்டது. எனவே, வாடிக்கையாளர்களும் தங்களது வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஞாற்றுக்கிழமை வங்கிகள் திறப்பு

வார இறுதி விடுமுறைகளைத் தொடர்ந்து வங்கி வேலைநிறுத்தம் நடைபெறுவதால், வங்கிச் சேவைகளில் நீண்டகால இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு இன்று வங்கிகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் கிளைகள், அலுவலகங்கள், ஏ.டி.எம்-களுடன் இணைக்கப்பட்ட கிளைகள் ஆகியவை விடுமுறை நாட்களில் செயல்பட ஆர்.பி.ஐ. அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் வங்கித் துறையில் வேலைநிறுத்தம் நடைபெறும் சூழலில், ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான ‘நெருக்கடி மேலாண்மை நடைமுறை’ 2019ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

வங்கிகள் வேலைநிறுத்தம்; பொதுமக்களின் கருத்து

வங்கிகளின் வேலைநிறுத்தம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று வங்கிகள் திறக்கப்படுவது குறித்து ஈடிவி பாரத் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இதுகுறித்து ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மொலாய் தபோதர் கூறியபோது, “ஒவ்வொரு முறையும் வங்கியில் ஏதாவது ஒரு வேலையை முடிக்க முயற்சிக்கும்போதும் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. சில நேரங்களில் கணினி வேலை செய்யாது. சில நேரங்களில் தேவையான சேவை கிடைக்காது அல்லது வேறு ஏதாவது காரணம் கூறப்படும். வாடிக்கையாளர்களின் சிரமத்தைப் பற்றி கவலைப்படாமல் வங்கிகள் தங்களது நலனில் மட்டும் கவனம் செலுத்துவதாக தெரிகிறது” என்று கூறினார்.

Years change, dates change, calendar pages turn… but the dialogue stays on repeat. 🔁" the proposal is under consideration. give us some more time."when will the wait for 5-day banking actually end?#UFBU pic.twitter.com/vCaSvEEIRD

தொடர்ந்து யமுனா விஹாரைச் சேர்ந்த மின்சார நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் சர்மா பேசியபோது, “பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு ஞாயிற்றுக்கிழமை வங்கிகளை திறக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. முதலாவதாக வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணிபுரியும் நடைமுறையை அரசு செயல்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்க கூடுதல் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்து, அத்தியாவசிய வங்கிச் சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.

நேரடியாக படிவம் சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்படலாம்

மூன்று நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருப்பது KYC, RTGS, காசோலை பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் ஈடிவி பாரத் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து பேசிய டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சச்சின்குமார், “வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக ஒருவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்தாலோ, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலோ, KYC தொடர்பான நிலுவைப் பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் அதிகாரப்பூர்வ காரணத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலோ அந்த மூன்று நாட்களில் வங்கிக்கு சென்று KYC உள்ளிட்ட புதுப்பிப்புகளை அவர்கள் மேற்கொள்ள முடியாது.

இதன் காரணமாக வங்கிக் கணக்கை அணுக முடியாத நிலை தொடரலாம். அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம். காசோலை பரிவர்த்தனை மற்றும் வங்கி சார்ந்த பிற செட்டில்மென்ட் சேவைகளும் பாதிக்கப்படலாம்.

காசோலைகள் உரிய நேரத்தில் பரிவர்த்தனை செய்யப்படாவிட்டால், பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், காசோலை திரும்புதல், தாமதக் கட்டணம், EMI செலுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம்.

மூத்த குடிமக்களுக்கு அதிக சிரமம்

இந்த நேரத்தில், ஆன்லைன் வங்கி சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தாமல் நேரடியாக வங்கிக் கிளைகளையே அதிகம் சார்ந்திருக்கும் மக்களுக்கே மிகப்பெரிய சிரமம் ஏற்படும்.

குறிப்பாக, வங்கிக் கிளைகளுக்குச் சென்று பணம் எடுப்பது அல்லது பணம் செலுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் பல மூத்த குடிமக்கள் மற்றும் வயதான வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம் சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்” என்று கூறினார்.

KYC புதுப்பிப்பும் பாதிக்கப்படலாம்

தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதியான ப்ரீத்தி துபே கூறியபோது, "ஒரு வாடிக்கையாளரின் KYC புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக வைத்துக்கொள்வோம். அதை சரிசெய்வதற்காக அந்த நபர் இயல்பாகவே வங்கிக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். ஆனால், வங்கி மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தால், அந்த காலகட்டம் முழுவதும் அவரால் எந்தப் பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியாது.

மேலும், அந்த நபருக்கு ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தாலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தெரிந்திருந்தாலும், வங்கிக் கணக்கில் பிரச்சனை இருக்கும்போது அது உதவாது. அத்தகைய சூழலில், பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அந்த வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக் கிளையையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று தெரிவித்தார்.