📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 08, 2026 10:03 PM

வீட்டில் நடந்த 2 மணி நேர சீக்ரெட் பயிற்சி.. 67 போட்டிகளுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்த பின்னணி

வீட்டில் நடந்த 2 மணி நேர சீக்ரெட் பயிற்சி.. 67 போட்டிகளுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்த பின்னணி

வீட்டில் நடந்த 2 மணி நேர சீக்ரெட் பயிற்சி.. 67 போட்டிகளுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்த பின்னணி

லக்னோ: ஸ்ரேயாஸ் ஐயர் தனது சர்வதேச டி20 வாழ்வில் 67 போட்டிகள் ஆடிய பின்னரே தனது முதல் சதத்தை அடித்து இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த டி20 போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்தார்.

இந்த வரலாற்று ஆட்டத்திற்குப் பின்னால், பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் அவரது வீட்டில் நடந்த 2 மணி நேர நுணுக்கமான பயிற்சி முக்கியக் காரணமாக அமைந்துந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 102 ரன்கள் குவித்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்ற போதும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் திணறி இருந்தார். பந்தை சிக்சருக்கு பறக்கவிடும் அளவிற்கு தனது பேட்டில் போதிய வேகம் கிடைக்கவில்லை என்பதை ஸ்ரேயாஸ் ஐயர் உணர்ந்தார். ஜப்பானில் இருந்து திரும்பியதும் அடுத்த போட்டிக்காகப் புறப்பட வேண்டிய அவசரத்தில் இருந்ததால், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயரை தனது வீட்டிற்கு நேரில் அழைத்துப் பேசினார்.

அந்த 2 மணி நேர ஆலோசனையில் 3 முக்கிய டெக்னிகல் மாற்றங்கள் செய்யப்பட்டன. பேட்டை பிடிக்கும் கிரிப் முறை, பந்து வீசப்படுவதற்கு முன்பாக செய்ய வேண்டிய ஆரம்ப நகர்வு, குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களைத் தகர்க்கும் வியூகம் - இவற்றை வெறும் வாய்வார்த்தையாகப் பேசாமல், வீட்டில் வைத்தே பேட்டை சுழற்றி உடற்பயிற்சி முறையில் செய்து பார்த்தனர். பந்து கையை விட்டு வருவதற்கு முன்பே அதை பவுண்டரிக்கு விரட்டும் தன்னம்பிக்கையும் ரிதமும் ஸ்ரேயாஸுக்கு மீண்டும் கிடைத்தது.

இதன் பலனாக அடுத்த 3 நாட்களில் லக்னோவில் நடந்த டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அவர் தனது முதல் சதத்தை விளாசினார். அபிஷேக் நாயருடன் மேற்கொண்ட அந்த நுணுக்கமான மாற்றங்களே தனது முதல் சதத்திற்கு முழு காரணம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.