📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 03:01 PM

உதயநிதி வீட்டுக்கு சென்ற விஜய்.. "பயங்கரமா பண்ணுற ப்பா"னு புகழாரம்.. நல்லாத்தான் இருந்திருக்கு!

உதயநிதி வீட்டுக்கு சென்ற விஜய்.. "பயங்கரமா பண்ணுற ப்பா"னு புகழாரம்.. நல்லாத்தான் இருந்திருக்கு!

சென்னை: தமிழ்நாட்டில் மே நான்காம் தேதிக்கு பிறகு அரசியல் முகமாக விஜய்யும், உதயநிதியும் மாறியிருக்கிறார்கள். ஒருவர் முதலமைச்சர்; இன்னொருவர் உதயநிதி ஸ்டாலின். சட்டப்பேரவையில் தனது கேள்விகளால் விஜய்யை துளைத்தெடுக்க உதய் முயற்சி செய்தாலும்; விஜய் முதலில் சேஃப் கேம் ஆடி அதற்கு பிறகு இறங்கி ஆடுகிறார்.

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்து, திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி வெற்றியடைந்ததாக உறுதியானதுமே திமுக மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சியின் முகமாக உதயநிதி மாற தொடங்கிவிட்டார். விஜய்க்கும், உதயநிதியும் ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள். போதாக்குறைக்கு விஜய், உதய்யின் கல்லூரி சீனியர் வேறு. எனவே வரும் நாட்களில் இரண்டு பேருக்கும் அரசியல் களத்தில் அனல் பறக்க போர் நடக்கப்போகிறது என்று ஆரூடங்கள் கூறின.

அப்படியே நடக்கிறது: சொன்னபடியே சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் சரி, தமிழ்நாடு பொது பிரச்னைகளிலும் உதயநிதி எதிர்க்கட்சி தலைவராக அடித்து ஆடுகிறார். சட்டப்பேரவையில் ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார். விஜய்யோ அத்தனைக்கும் அமைதியோ அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி என்று இருந்தார். பிறகு கூட்டத்தொடர் முடியும் சில நாட்களுக்கு முன்பு ஒன் சைடு கேம் மாதிரி அவரே சில விஷயங்களை வாசித்துவிட்டு சென்றுவிட்டார்.

ஸ்கோர் செய்த உதயநிதி?: அந்த வாசிப்பு அரங்கேற்றத்தில் உதயநிதியே பெரும்பாலும் ஸ்கோர் செய்துவிட்டதாக பலரால் கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு ஃபார்முலா ஒருமுறை கைகொடுத்தால்; மாறி கொண்டிருக்கும் ஆட்டத்தில் அதே ஃபார்முலாவை அமுல்படுத்துவது முதிர்ச்சியின்மைதான். அதைத்தான் விஜய் செய்தார். திமுகவை தொடர்ந்து அட்டாக் செய்வதிலாவது ஒரு புதுமையை கொண்டு வருவார் என்று பார்த்தால்; வழக்கமான சர்க்காரியா கமிஷனை கையில் எடுத்தார். மிசா தொடர்பான கிண்டலையும் பதிவு செய்தார்.

நட்பில் இருந்தவர்கள்: அந்த சைகையில் உள்நோக்கம் இல்லை என்று விஜய் பதிவு செய்தாலும்; எதார்த்தத்தில் அப்படித்தான் எல்லோருக்கும் பதியும் என்பது பலரது கருத்தும். அதேசமயம் விஜய் அப்படி சட்டப்பேரவையில் வாசித்தபோதும் சரி உதயநிதி ரொம்ப கேஷூவலாகவே எதிர்கொண்டார். அதற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பிலும் பதிலடியை கொடுத்திருந்தார். இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் இருவரும் ஒருகாலத்தில் நட்பில் இருந்தவர்கள்தான்.

விஜய் சொன்ன பதில்: உதயநிதி மற்றும் மாறன் குடும்பத்தின் தயாரிப்பில் விஜய் படங்கள் நடித்ததும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்குள் இருந்த நட்பினை யாரோ சிலர் வேண்டுமென்றெதான் கலகத்தில் கொண்டு போய் நிறுத்தினார்களாம். அதற்கு பிறகும் விஜய்யிடம் உதயநிதி பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்ல; அதற்கு இப்போதைய முதலமைச்சரும் 'நன்றி ப்பா' என பதிலளித்தாராம்.

மேலும், ஒரு முறை உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் நடந்த விழாவில் பங்கேற்ற விஜய்; அரசியலில் உதய்யின் செயல்பாடுகளை பார்த்து, 'பயங்கரமா பண்ணுற ப்பா' என புகழ்ந்து தள்ள; உதயநிதியோ தன்னடகத்தோடு, 'சரி அண்ணா சரி அண்ணா' என்று அந்த புகழுரையை ஏற்றுக்கொண்டாராம். அதன் பின்பு அந்த அளவில்தான் நட்பு இருந்திருக்கிறது. இப்போது இரண்டு பேரும் குதித்திருக்கும் அரசியல் கோதாவில் இன்னும் ஏகப்பட்ட காட்சிகளை பார்க்க காத்திருக்கிறது தமிழ்நாடு..