📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 09, 2026 05:03 PM

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்தது ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை சிறை பிடித்தது ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா அறிவித்தது. தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்தது.

நீர்மூழ்கி கப்பல்

உச்ச கட்ட பதற்றம்