📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 09, 2026 03:01 PM

Bigg Boss 10 Tamil: 3 நாளில் வெளியேறிய நடிகர் பிளாக் பாண்டி..பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Bigg Boss 10 Tamil: 3 நாளில் வெளியேறிய நடிகர் பிளாக் பாண்டி..பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Bigg Boss 10 Tamil: 3 நாளில் வெளியேறிய நடிகர் பிளாக் பாண்டி..பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Bigg Boss Tamil Season 10: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி 3 ஆவது நாளிலேயே நடிகர் பிளாக் பாண்டி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து மோதல்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வெளியேறிய பிளாக் பாண்டி

நடிகர் பிளாக் பாண்டி என அழைக்கப்படும் லிங்கேஸ்வரன், சின்னத்திரை மற்றும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற இவர், பின்னர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் 10-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய பிளாக் பாண்டி, நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரணம் என்ன?

உடல்நலக் காரணங்களால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வழக்கமான எவிக்ஷன் கிடையாது என்றும் கூறப்படுகிறது. அதாவது, முதல் வாரத்திற்கான அதிகாரப்பூர்வ எலிமினேஷன் நடைபெறுவதற்கு முன்பாகவே பிளாக் பாண்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியின் முதல் வாரமே பல்வேறு பரபரப்பான சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. குறிப்பாக முனியம்மா, சதிகா உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து மோதல்கள் கவனம் பெற்றுள்ளன. 19 போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பங்கேற்ற நிலையில் தற்போது பிளாக் பாண்டி வெளியேறியப்பின் 18 போட்டியாளர்கள் போட்டியை தொடர்கிறார்கள்.

#Day3 #Promo1 of #BiggBossTamil Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/OJEiAqlCKX

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி