📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 07:01 PM

TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு ஆர்வத்துடன்

TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு ஆர்வத்துடன்

TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

Tamil Nadu Bypolls 2026: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 7 தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி, அதாவது இன்று இடைத்தேர்தலை அறிவித்திருந்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில், இரண்டு தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

மாலை 5 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 83.86 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 78.53 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்த இடைத் தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவியது. தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதேபோல், தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள், அடுத்த சில நாட்களில் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு

இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அங்கு, மாலை 5 மணி நிலவரப்படி, 78.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி