டில்லியில் போராட்டம் நடத்திய ராகுல் கைது
-நமது டில்லி நிருபர்-
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி, பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி, இண்டி கூட்டணி எம்பிக்கள் பதாகைகளுடன் இன்று (அக் 06) பேரணி சென்றனர். அதை தொடர்ந்து ராகுல் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தடுப்புகளும் அமைக்கப்பட்டன. தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவர்களை வேனில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், ராகுலும், பிரியங்கா வேனில் இருந்து இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பு மீது ஏறி ராகுல் தேசிக்கொடியை ஏந்தி போராடினார். போலீசார் அனுமதிக்காததால், தேர்தல் கமிஷன் அலுவலகம் அருகே ராகுல், பிரியங்கா அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் கூறியதாவது: 50 மீட்டர் தொலைவில் தான் அலுவலகம் உள்ளது. ஆனால், எங்களை செல்ல அனுமதி மறுக்கின்றனர். எங்களை சந்திப்பதில் என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. நேர்மையாக தேர்தல் நடத்துவது தான் தேர்தல் கமிஷன் வேலை. 300 எம்பிக்கள் ஞானேஷ்குமாரை சந்திக்க விரும்புகின்றனர். ஆனால், அவர் பயப்படுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனரை சந்திக்க முடியாவிட்டால் ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம். இவ்வாறு ராகுல் கூறினார்.