📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 05:30 PM

தவெகவுக்கு ‘விசில்’ சின்னம், மாநிலக் கட்சி அங்கீகாரம்

தவெகவுக்கு ‘விசில்’ சின்னம், மாநிலக் கட்சி அங்கீகாரம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், ‘விசில்’ சின்னத்தையும் தவெகவுக்கே நிரந்தரமாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தமிழக, புதுவை சட்டமன்றத் தேர்தலில் தவெக முதன்முறையாகக் களம்கண்டது.

தமிழகத்தில் 108 தொகுதிகளிலும் புதுவையில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும், காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது.

மாநிலக் கட்சி அந்தஸ்து பெறுவதற்குத் தேவையான ஆறு விழுக்காட்டு வாக்கு வரம்பை விஞ்சி, தவெக 35 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தது.

அதன் அடிப்படையில் தற்போது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதையடுத்து, தவெக கட்சித் தலைமைக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அக்கட்சித் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் விநியோகித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.