தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது: தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எச்சரிக்கை
தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது: தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பில் எஸ்ஐஆர் நடைமுறைகளில் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து முறைகேடுகளுக்கு வித்திட்டுள்ள இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரபீக் ராஜா தலைமை தாங்கினார்.
மாநிலப் பொதுச் செயலாளர், முஜிபுர் ரஹ்மான் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “ 13 கோடி பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியது ஞானேஷ்குமார் எனும் ஒற்றை மனிதரின் விருப்பப்படி மட்டுமே உள்ளது. அமித்ஷாவுக்கு மிக நெருக்கமான இந்த அதிகாரி தான் செய்த முறைகேடுகள் மூலமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை குழி தோண்டி புதைத்துள்ளார். இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.