📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 04:03 AM

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகர் டைகர் ஷெராப்பிடம் தொலைபேசியில் பேசிய மராட்டிய முதல்

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகர் டைகர் ஷெராப்பிடம் தொலைபேசியில் பேசிய மராட்டிய முதல்

பாலிவுட் திரையுலகின் பிரபல இளம் நடிகரான டைகர் ஷெராப் கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மும்பைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்துத் தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மாபியா தலைவனான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

நடிகர் டைகர் ஷெராப் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, மும்பை காவல்துறை மொத்தம் 15 குழுக்களை அமைத்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரான டைகர் ஷெராபின் ஓட்டுநர் பிர்தோஷின் இடது கையில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது.

மும்பை காவல்துறையின் தகவல்படி, நடிகர் டைகர் ஷெராப் தனது வாகனத்தில் ஒரு மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, ​​அவரது காரை நோக்கி மூன்று முதல் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவரைப் பார்ப்பதற்காக அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்திற்குள் இருந்து அவரது காரை நோக்கி பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால் டைகர் ஷெராப் மீது எந்தக் குண்டும் படவில்லை. தடயவியல் குழு சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளது.